cricket news
கடைசில வதங்கி உண்மையாச்சே… ஹர்திக் பாண்டியா எடுத்த அதிரடி முடிவு…!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நட்டாஷாவை விவாகரத்து செய்யப்போவதாக தெரிவித்து இருக்கின்றார்,
செர்பியா நாட்டை சேர்ந்தவர் நடாஷா. இவர் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியாவை கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. தொடர்ந்து சில மாதங்களாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இது குறித்து இருவருமே வெளிப்படையாக எந்த ஒரு தகவலையும் கூறாமல் இருந்து வந்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி தட்டி தூக்கியது. ஹர்திக் பாண்டியா அந்த கொண்டாட்டத்தில் இருந்தபோது அவரது மனைவி நட்டாஷா தனது குழந்தையுடன் செர்பியாவுக்கு சென்றிருந்தார்.
இதனால் இந்த வதந்தி உண்மையாக இருக்கும் என்று பலரும் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்வதற்கு முடிவு எடுத்து இருக்கின்றார் ஹர்திக் பாண்டியா. இருவரும் பரஸ்பரம் முடிவு எடுத்து பிரிந்து விட்டனர் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார். இருவரும் பிரிய போவதாக சமூக வலைதள பக்கங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில் அது அனைத்தும் தற்போது உண்மையாகிவிட்டது.