Connect with us

இரண்டு வாரத்தில் 7 லட்சம் பேர் வேலையிழப்பு – அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்

Corona (Covid-19)

இரண்டு வாரத்தில் 7 லட்சம் பேர் வேலையிழப்பு – அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்

அமெரிக்காவில் கொரோனாவால் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை அங்கு 7 லட்சம் பேர் வேலை இழந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 70,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. தற்போது அமெரிக்காவில் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும் 7.4 ஆயிரம் பேர் உயிரிழந்தும் உள்ளனர். உலகளவில் அதிக அளவில் வைரஸ் தொற்று நோயாளிகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது.

இதனால் அமெரிக்காவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் கடந்த 14 நாட்களில் மட்டும் 7 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மே இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 8 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 20 நாட்களில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் சதவீதம் 3.5 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த மாதத் தொடக்கத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

More in Corona (Covid-19)

To Top