சர்ச்சையைக் கிளப்பிய கனிகா கபூர்! கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

சர்ச்சையைக் கிளப்பிய கனிகா கபூர்! கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் குணமாகியுள்ளதால் வீடு திரும்பியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பாலிவுட் பின்னணிப் பாடகி கனிகா கபூர் மார்ச் 15 ஆம் தேதி லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். அப்போது இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த நிலையில் அவரை விமான நிலைய அதிகாரிகள்  ]அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால் அதிகாரிகள் பேச்சைக் கேட்காத அவர் லக்னோவில் 100 பேருக்கு மேல் கலந்து கொண்ட பார்ட்டிக்கு சென்றது சர்ச்சைகளைக் கிளப்பியது. அதன் பின்னர் அவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இதையடுத்து கனிகா கபூர் டெல்லியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கும் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையைப் பற்றி குற்றம் சொல்லிக் கொண்டும் ஒரு சினிமா பிரபலம் போல நடந்துகொண்டார். இதுபற்றி அந்த மருத்துவமனையின் இயக்குனர் பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 5 முறையாக அவருக்கு முடிவாக பாஸிட்டிவ்வாக வர இப்போது அவரது ரத்தத்தில் கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்.

Actress kanika kapoor discharged from hospital