நடிகர் யோகிபாபு தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து தனது திருமண வரவேற்பு அழைப்பிதழைக் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களோடும், தனியாக ஹீரோவாகவும் நடித்து வரும் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த திருமணம் எளிமையான முறையில் கோயிலில் நடந்ததால் திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்கவில்லை.
அதனால் அவர்களுக்காக தனியாக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை அவர் ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களைக் கொடுத்து வருகிறார். அதை முன்னிட்டு தேமுதிக தலைவரும் மூத்த நடிகருமான விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வரும் விஜயகாந்த் யோகிபாபுவின் திருமண வரவேற்புக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.