விசுவுக்கு திரையுலகினர் அஞ்சலி – வரமுடியாத சூழலில் மகள்கள் !

விசுவுக்கு திரையுலகினர் அஞ்சலி – வரமுடியாத சூழலில் மகள்கள் !

பன்முகத்திறமைக் கொண்ட கலைஞரான விசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாத சூழலில் அவரது மகள்கள் மூவரும் அமெரிக்காவில் உள்ளனர்.

இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முக கலைஞராக திகழ்ந்தவர் நடிகர் விசு. இவர் 1941இல் சென்னையில் பிறந்தவர். தமிழ் திரை உலகிற்கு பல இன்னல்களுக்கு அப்பால் “குடும்பம் ஒரு கதம்பம்” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு இவரை இயக்குனராக பிரபலம் அடையச் செய்தது “மணல் கயிறு” என்ற திரைப்படம்தான். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் இயக்குனராகவும், கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், நடிகராகவும், தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில் வயது மூப்புக் காரணமாக இவர் சமீபகாலமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். சிறுநீரகப் பிரச்சனைக் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாலை உயிர்பிரிந்தார். அவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன். மகள்கள் மூவரும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்களால் இறுதிச்சடங்குக்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்று சென்னையில் அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.