தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான் விக்ரம் இன்னும் சில ஆண்டுகளில் சினிமாவை விட்டு விலக இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தனது சினிமா வாழ்க்கையில் பல வருட போராட்டங்களுக்குப் பிறகு சேது படத்தின் மூலம் தன்னை யார் என நிரூபித்தார் விக்ரம். 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகி தமிழ் சினிமாவின் முன்ன்ணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். அவர் நடித்த பிதாமகன் திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது.
இப்போது அவர் கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவநட்சத்திரம் மற்றும் மகாவீர் கர்ணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நடித்து முடித்த பின்னர் அவர் திரையுலகில் இருந்து விலக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து ஹீரோவாக அறிமுகமாகியுள்ள தனது மகனின் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா வெளியாகி துருவ் விக்ரம்மின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.