ரெக்கார்டுகளை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கும் மகாராஜா… குஷியில் ரசிகர்கள்…!

ரெக்கார்டுகளை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கும் மகாராஜா… குஷியில் ரசிகர்கள்…!

குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பிலிருந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஜய் சேதுபதிக்கு 50-வது படமாக இந்த திரைப்படம் இருந்த நிலையில் சிறந்த கம்பாக் படமாக அவருக்கு அமைந்தது.

கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான மகாராஜா திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியது. படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஜூலை 12ஆம் தேதி ஓடிடி தளமான netflix-இல் மகாராஜா திரைப்படம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்தியா மட்டும் இல்லாமல் உலக அளவில் மகாராஜா திரைப்படம் கவனத்தை ஈர்த்திருந்தது. வெளிநாட்டவர்கள் மகாராஜா திரைப்படத்தை புகழ்ந்து பேசி இருந்தார்கள்.

2024யில் netflixல் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றிருக்கின்றது. மேலும் உலகம் முழுவதிலிருந்தும் நெட்லிக்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள்.

மேலும் கரீனா கபூர், கீர்த்தி சனோன், தபு ஆகியோர் நடித்த Crew திரைப்படம் 17.9 பார்வையாளர்களுடனும், லாப்பாட்டா லேடீஸ் படம் 17.1 பார்வையாளர்களுடனும் முன்னிலை இருந்து வந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி ஆறு வாரங்கள் ஆகியும் உலகம் முழுவதிலும் சுமார் 8 நாடுகளில் டாப் 10 வரிசையில் மகாராஜா திரைப்படம் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.