ஏன் கோட் சூட் ? அஜித் வழியில் விஜய் – கலகலப்பான மாஸ்டர் இசை வெளியீடு !

ஏன் கோட் சூட் ? அஜித் வழியில் விஜய் – கலகலப்பான மாஸ்டர் இசை வெளியீடு !

மாஸ்டர் இசை வெளியீட்டுக்கு கோட் சூட் உடையில் வந்த நடிகர் விஜய் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது.

இந்த விழாவுக்கு வழக்கத்திற்கு மாறாக கோட் சூட் உடையில் வந்து அசத்தினார் விஜய். இதன் ரகசியம் குறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்டபோது ‘எல்லா விழாக்களுக்கும் சுமாரான உடைகளில் செல்வதாக என்னுடைய உடை வடிவமைப்பாளர் பல்லவி சலித்துக்கொண்டு இந்த கோட்டை கொடுத்தார். நானும் நண்பர் அஜித் போல செல்லலாமே என கோட் சூட் அணிந்து வந்தேன்’ எனக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி அதிரவைத்தனர்.