மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் விஜய் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 15 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.
இந்த திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலிஸ் விழா மார்ச் 15 ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் நேரலையில் சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இந்த இசை வெளியீட்டு விழாவின் போதுதான் விஜய் தனது அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பதை அறிவிக்கப்போவதாக சொல்லப்பட்டு வருகிறது.