cinema news
விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ல் பீஸ்ட் படம் வெளியாகிறது. தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு இப்படம் வெளியாகும் நிலையில் விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.
இந்த படம் கடலூரில் உள்ள தியேட்டரில் ரசிகர் காட்சி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள், அங்கு மறியலில் ஈடுபட்டனர்.
அங்குள்ள பாரதி சாலை என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.