<span;>நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிறாடை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் இதனால் வெண்ணிற ஆடை மூர்த்தி என அழைக்கப்பட்டார். தம்ப்ரி என இவர் சொல்வதும் வயிற்றைத் தட்டி புர் என சொல்வதும் இரட்டை அர்த்த வசனங்களை பட்டும் படாமலும் ஜாலியாக பேசுவதும் இவரோட காமெடிகளில் புகழ்பெற்றவை.
<span;>ஜோதிடத்தில் நன்கு புலமை பெற்றவர் இவர். தற்போது 80 வயதுக்கு மேல் ஆகிறது இவருக்கு. இருப்பினும் இப்பொழுதும் திரைப்படங்களில் நடிக்கும் உடல் நலத்துடன் தான் இவர் இருக்கிறார். இருப்பினும் தனக்கு வரும் வாய்ப்புகளை இவர் வேண்டாம் என்கிறாராம்.காரணம் என்னவென்றால் 80 வயது வரை தொடர்ந்து பல வருடங்களாக நடித்தாயிற்று. இனிமேல் குடும்பத்தில் சில காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் இவரது இலக்காம்.அதனால் எப்படிப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும் அதை வேண்டாம் என்று மறுத்து விடுகிறார் சின்ன வேடமோ பெரிய வேடமோ எதுவுமே வேண்டாம் என்று மறுத்து விடுகிறேன் என இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

