வல்லவன் ஒருவன் – ஜெய்சங்கரின் வித்யாசமான சஸ்பென்ஸ் படம்

வல்லவன் ஒருவன் – ஜெய்சங்கரின் வித்யாசமான சஸ்பென்ஸ் படம்

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர்,இவர் அறிமுகமானதில் இருந்து பல வருடங்கள் இவர் மாஸ் நடிகரா விளங்கினார். 80களின் ஆரம்பத்தில் நடிகர் மோகனுக்கு எப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் வருமோ அது போல ஜெய்சங்கரின் நடிப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு படம் வந்துவிடும். பெரும்பாலும் அவை சஸ்பென்ஸ் படங்களே.

 

 

 

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் இவரை வைத்து பல  சஸ்பென்ஸ், சிஐடி டைப் படங்களை கொடுத்துள்ளார், அப்படியாக சிஐடி சங்கர் , வல்லவன் ஒருவன் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார் டி.ஆர் சுந்தரம்.

 

ஒரு ஆபத்தான கும்பல் துப்பாக்கிகளை தயாரிக்கிறது, ஆபத்தான வெடி பொருட்களை தயாரிக்கிறது, ரயில் உள்ளிட்டவைகளை தடம் புரள செய்ய திட்டமிடுகிறது அந்த கும்பல். ஒரு சிஐடி அதிகாரியையும் அந்த கும்பல் கொ… செய்கிறது, இந்த நிலையில் ஸ்பெஷல் சி.ஐ.டி அதிகாரியாக ஜெய்சங்கர் அங்கு பம்பாய் டிஐஜியால் அனுப்பி வைக்கப்படுகிறார், அவர் சென்னை வந்து இறங்கியதில் இருந்து அந்த கும்பல் அவரை நோட்டமிடுகிறது. ஜெய்சங்கர் வழக்கம்போல் தனது சிஐடி சாகசத்தின் மூலம் அந்த கும்பலின் தகிடுத்தத்தத்தை வெளிக்கொண்டு வருவது கதை.

 

ஏ.எல் நாராயணன் வசனம் எழுதி ஜெய்சங்கர், விஜயலட்சுமி , மனோகர், தேங்காய் சீனிவாசன் நடித்த இந்த படம் ஒரு சிறப்பான துப்பறியும் படமாகும்.