லேட்டஸ்ட் வலிமை அப்டேட்

லேட்டஸ்ட் வலிமை அப்டேட்

வலிமை அப்டேட்டே வராத காலம் போய் இப்போது தொடர்ந்து வலிமை அப்டேட் வந்து கொண்டிருக்கிறது. அஜீத்தின் வெறித்தனமான ரசிகர்களுக்கு அஜீத் நடந்தாலும் உட்கார்ந்தாலும் எல்லாமே அப்டேட்தான்.

அப்படிப்பட்ட ரசிகர்கள் போஸ்டர் வெளியானால், பாடல் வெளியானால் சும்மா இருப்பார்களா, கொண்டாடி தீர்த்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் வேற மாறி என்ற பாடல் வெளியாகி இருந்தது. தற்போது அஜீத் நடிக்கும் வலிமை  படத்தின் ஸ்பெஷலான் சண்டைக்காட்சிக்காக இப்படக்குழு ரஷ்யாவில் முகாமிட்டுள்ளது.

வரும் 23 ம் தேதி வரை 5 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.