வடிவேலு தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னனிகளுடன் நடித்தவர். ரஜினி, கமல் என இவர் நகைச்சுவைக்காக ஜோடி போட்ட நடிகர்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே தான் போகும்.
“படிக்காதவன்” படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருப்பார். அவருடன் தமன்னா, சுமன் உள்ளிட்ட பலரும் நடித்து வெற்றி படம் அது. விவேக் ‘டான்.ஆக வந்து நகைச்சுவை செய்திருப்பார்.
“ஆந்திரா எனக்கு, நெல்லூர் உனக்கு” என வில்லனுடன் ‘டீல்’ பேசும் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். இப்படி பெயர் பெற்றுத்தந்த இந்த கேரக்டரில் விவேக் நடித்த தன் பின்னனி பற்றி நகைச்சுவை நடிகர் ‘பாவா’லட்சுமணன் சொல்லியிருந்தார்.

விவேக் நடித்த “அசால்ட் ஆறுமுகம்” கேரக்டரில் முதலில் நடிப்பதாக இருந்தது வடிவேலுவாம். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது காட்சிகளில் இப்படி நடியுங்கள், அப்படி நடியுங்கள் என தனுஷ் சொன்னாராம். நான் பார்த்து வளர்ந்த பையன் என்னை அதிகாரம் செய்வதா என கோபப்பட்டு படத்திலிருந்து வெளியேறினாராம் வடிவேலு.

தனுஷுடன் லட்சுமணன் “புதுப்பேட்டை” படத்தில் முதலில் நடித்திருந்தாராம். அப்பொழுதே தனுஷ் மற்ற நடிகர்களுக்கு நடிக்க ‘டிப்ஸ்’ கொடுப்பாராம். தனது அண்ணன் செல்வராகவனுக்கு இது பிடிக்காது, இப்படிசெய்தால் தான் பிடிக்கும் என அவர் பெயரைச்சொல்லி கட்டளை போடுவாராம்.
செல்வராகவனிடம் உதவி இயக்குனர்களாக 14 நபர்கள் பனிபுரிந்தார்களாம் “புதுப்பேட்டை”படத்தில். ஒரு கட்டத்தில் உனக்கு நடிக்க வரவில்லை, நீங்கள் இந்த படத்திற்கு வேண்டாம் என சொல்லி லட்சுமணனை படத்திலிருந்தே வெளியேற்றி விட்டாராம் செல்வ ராகவன்.