cinema news
‘வாழை’ பல விருதுகளை பெற தகுதியானது… சிவகார்த்திகேயன் புகழாரம்…!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. இந்த திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தை குறித்து சிவகார்த்திகேயன் பாராட்டி பேசி இருக்கின்றார். இந்த வீடியோவை மாரி செல்வராஜ் தனது எக்ஸ்ட்ரா பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.
அந்த வீடியோவில் மிக நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு strong-ஆன இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். ‘வாழை’ என்னுடைய favourite படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த வாழை என்று சிவகார்த்திகேயன் பாராட்டி இருக்கின்றார்.
மேலும் மாரி செல்வராஜ் அவரது பதிவில் பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள்.. கர்ணன், மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைப்பிடித்துக் கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு பிரியத்தோடு தந்திருக்கும், வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திக் கொள்வேன், நன்றி” என்று தெரிவித்திருக்கின்றார்.