பொம்மை வடிவில் பேய்- தமிழில் மிரட்டிய  வித்யாசமான திகில் படம்

பொம்மை வடிவில் பேய்- தமிழில் மிரட்டிய வித்யாசமான திகில் படம்

1991ம் ஆண்டு பொங்கலுக்கு தர்மதுரை, சாமிப்போட்ட முடிச்சு உள்ளிட்ட பல்வேறு படங்கள் ரிலீசாகின, அத்துடன் இந்த ஹாரர் படமான வா அருகில் வா படமும் ரிலீஸ் ஆச்சு.

 

 

கண்ணதாசனின் மகன் கலைவாணன் கண்ணதாசன் இப்படத்தை இயக்கி இருந்தார்.  நாகப்பட்டினம் பகுதியில் நடப்பதாக அமைக்கப்பட்டிருந்த இப்படத்தில் ஒரு குடும்பத்தில் மருமகளாக வரும் ஒரு அப்பாவி பெண்ணை பல்வேறு விசயங்களுக்காக கொடுமைப்படுத்தி அவரது வாழ்க்கையை முடித்து விடுகிறார்கள்.

அந்த பெண்ணின் கணவரான ராஜாவும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார், இப்போது ஆவியாக வரும் அந்த பெண் அந்த வீட்டில் இருக்கும் ஒரு பொம்மையின் உட்புகுந்து எல்லோரையும் பழிவாங்குகிறார்.

 

பேய்கள் உயிருள்ள உடலில்தான் குடியேறி பல சேட்டைகள் செய்யும் என்பது பொதுவான் கருத்து இந்த சூழ்நிலையில் முதல் முறையாக ஆன்மாக்கள், தனக்கு பிடித்த எந்த ஒரு விசயத்தையும் ஊடகமாக பயன்படுத்திக்கொள்ளும் என்ற வகையில் இப்படி சொல்லப்பட்டிருந்தது.

 

ராஜா வைஷ்ணவியை கல்யாணம் செய்கிறார், அவர்தான் ராதாரவி உள்ளிட்டோர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு இறக்க, பழிவாங்க பொம்மை வடிவத்தில் வருகிறார், அந்தக்கால அதே கண்கள் டெரர் பாடலான வா அருகில் வா என்ற பாடலை மையமாக வைத்து இந்த பட தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.சும்மா சொல்லக்கூடாது சும்மா மிரட்டி விட்ருந்தாங்க என்றுதான் சொல்லணும்.

 

ராஜாவின் இன்னொரு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். சாணக்யா என்பவர் இசை அமைத்து மிரட்டி இருந்தார். 90ஸ் கிட்ஸ்களால் மறக்க முடியாத பேய்ப்படம் இது.