தனது திருமண வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்களை சந்தித்து இறுதியில் பிரிந்து விடலாம் என்ற முடிவிற்கே வந்துள்ளனர் ஜீ.வி.பிரகாஷ் – சைந்தவி தம்பதியர். தனிப்பட்ட வாழ்வில் தனக்கு இருக்கும் வேதனைகளை வெளிக்காட்டாமல் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வேலைகளை செய்து வருகிறார் இவர்.
தற்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் வரிசையில் இவருக்கென தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் கதாநாயகனாக அவ்வப்போது தமிழ் ரசிகர்களிடம் தனது முகத்தை காட்டி வருகிறார் இவர்.
தனக்கென ஒரு ட்ரெண்டை வைத்துக்கொண்டு, அதில் பயணித்து தனது ரசிகர்களயும் தனது இசை பயணத்தில் தன்னுடனே அழைத்து செல்பவர் இவர். இவரது இசையில் வெளி வந்த பாடல்கள் இன்றைய 2கே கிட்ஸ்ன் ஃபவரைட் பாடல்களாக இருந்து வருகிறது. அதிலும் இவரது மெலடி பாடல்கள் காதலர்களின் விருப்பத்திற்குறியதாகவே இருக்கும்.

பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்”, சிவகார்த்திகேயனின் “அமரன்”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” ஆகிய படங்களின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தான். இந்த படங்களை பற்றிய அப்-டேட்களை சொல்லியிருக்கிறார் ஜீ.வி. அதில் “தங்கலான்” படத்தின் பணிகளை முடித்து விட்டேன். ஃபர்ஸ்ட் சிங்கிளை முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்தும் விட்டேன். அது விரைவில் வெளியாகி விடும்.
அதே போல தான் “அமரன்” படத்தின் வேலைகளும் முடிந்து விட்டதாகவும். வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளரின் அனுமதிக்காக காத்திருப்பதாக சொல்லியதோடு, ” நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” படத்தின் நான்கு பாடல்கள் அருமையாக வந்திருப்பதாகவும் அது இளைஞர்களுக்கான படமாக வந்திருக்கிறது என அப்-டேட்களை அள்ளிக்கொடுத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ் குமார்.