cinema news
தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் இவர்தானா? உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்
தளபதி 65 என அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் தற்போது லோகேஷ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா ஊரடங்கு முடிந்தது ரிலீஸாக உள்ளது. இதையொட்டி இப்போது படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் சுதா கொங்கராவின் பெயர் முன்னர் அடிபட்டாலும் இப்போது முருகதாஸ்தான் அந்த படத்தை இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி 2021 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தை பற்றி வேறு எந்த தகவலும் வெளியாகாத நிலையில் தற்போது முதல்முறையாக படத்தின் கதாநாயகி யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலே நடிக்க இருக்கிறாராம். முதல் பாதியின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாக உள்ளதால் அவரையேத் தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமன் தமிழிலும் சில படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் பெரிய ஹீரோ படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல்முறையாகக் கிடைத்துள்ளது.