Connect with us

தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்… திரைப்பிரபலங்கள் இரங்கல்…!

cinema news

தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்… திரைப்பிரபலங்கள் இரங்கல்…!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டில்லி பாபு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி இந்த நிறுவனத்தின் தலைவர் டில்லிபாபு.  இவர் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை திரையுலகில் அறிமுகப்படுத்தி இருக்கின்றார். தயாரிப்பாளர் டில்லிபாபு மரகத நாணயம், ராட்சதன், பேச்சுலர், ஓ மை கடவுளே, கள்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் தற்போது மிடில் கிளாஸ், வளையம், யார் அழைப்பது போன்ற படங்களையும் தயாரித்து வருகின்றார். இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான இவர் நேற்று இரவு 12:30 உடல் நலக்குறைவால் காலமானார்.

இவரின் திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தயாரிப்பாளர் டில்லிபாபு மறைவுக்கு இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது பெருங்களத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4.30 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in cinema news

To Top