cinema news
என்னது இதெல்லாம் இவர் பாடிய பாடல்களா?…நம்பவே முடியலையே அதிர்ச்சி கொடுத்த அருள்மொழி!…
இளையராஜாவின் இசை குழுவில் இடம் பெற்றிருப்பவர் அருள்மொழி. புல்லாங்குழல் இசையமைப்பதில் வல்லவர் இவர், தனது திறமையால் இளையராஜாவின் இசைக்கு கூடுதல் சுவை சேர்த்திருப்பார். இளையராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் இவரும் ஒருவர்.
“சத்யா” திரைப்படத்தில் வரும் ‘வளையோசை கலகலவென’ பாடலில் புல்லாங்குழல் இசைத்தவிதத்தை மேடையில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னர் இசைக்க சொல்லி நிகழ்ச்சி பார்க்க வந்தவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தார் இளையராஜா. முதலில் வேறு விதமாக இசைக்கப்பட்டது மாற்றியமைக்கப்பட்டது. அதுவே பாடல் காட்சியில் இடம் பெற்றது.
‘புல்லாங்குழல்’ கலைஞராகவே மட்டும் அறியப்பட்ட அருள்மொழி பாடல் பாடுவதிலும் வல்லவர். வேறு பாடகர்கள் பாடிய பாடல் இது என நினைத்துக் கொண்டிக்கும் ‘ஹிட்’ பாடல்கள் பலவற்றை பாடியவர் இவர் தான் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.
பிரபு நடித்த “திருநெல்வேலி” படத்தில் வரும் ‘ஏழா அழகம்மா என்ன பாத்தா எழப்பமா’ பாடல் இவர் பாடியது. இதைப்போல சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த ‘சூப்பர் ஹிட்’ படமான “சூரியவம்சம்” த்தில் வரும் ‘சலக்கு சலக்கு சரிக சேலை’, “சிம்மராசி” ‘கும்பகோணம் சந்தையில் பார்த்த’. அஜித் குமார், பார்த்திபன், தேவயானி நடித்த “நீ வருவாய் என” படத்தில் வரும் ‘பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா’, பாலா இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘சேது’வில் வரும் ‘சிக்காத சிட்டொன்னு கையில் வந்தா’ பாடலும் இவர் பாடியதே.
இளையராஜா இசையில் நடிகர் செல்வா நடித்து ‘சூப்பர் ஹிட்’ ஆன “சக்திவேல்” படத்தில் வரும் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ பாடலும் இவரது மயக்கும் குரலில் வந்த பாடலே.