sundarc mohanlal
sundarc mohanlal

சுந்தர்.சிக்கே விபூதி அடிச்ச சுராஜ்?…அடேங்கப்பா இவ்வளவு அப்பாவியா இருந்திருக்காரே மனுஷன்..

சுந்தர்.சி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்குனராக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்த வருகிறார்.

தான் இயக்கிய  படங்கள் தவிர, பிற இயக்குனர்களிடமும் கதாநாயகனாக பணியாற்றியுள்ளார். சுந்தர்.சி நடித்து ஹிட்டானது “தலைநகரம்”. ‘நாய்’ சேகராக வடிவேலு செய்த நகைச்சுவையும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு  சென்றது. படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்திருக்கிறார் அவர்.

sundar.c vadivelu
sundar.c vadivelu

“ரைட்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுந்தர்.சிக்கு அந்த படம் மிகப்பெரிய பெயரை பெற்ற தந்தது. அந்த படம் ஒரு மலையாள படத்தினுடைய ரீ-மேக் என்பது தனக்கு தெரியாது என வெகுளித்தனமாக சொல்லி இருப்பார் சுந்தர்.சி.

தனது தாயார் சொல்லியே அந்த படம் ஒரு ரீ-மேக் படம் என்பது தனக்குத் தெரிய வந்தது என்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவலை தெரிவித்து இருக்கிறார் சுந்தர்.சி. வயது முதிர்ந்த சுந்தர்.சியின் தாய், ஒருமுறை சுந்தர்.சியை பார்த்து நீ நடிச்ச அந்த மோகன் லால் அந்த படத்தை போடேன்னு சொன்னார்களாம்.

அதற்கு சுந்தர்.சியோ நான் எங்கே மோகன் லால் படத்துல நடிச்சேன் எனக்கேட்க. “தலை நகரம்”படத்தை குறிப்பிட்டு சொன்னார்களாம் சுந்தர்.சியின் அம்மா. அதன் பிறகு அந்தப் படத்தை பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டத்தில் அவர் தாய் சொன்னது போல மோகன்லால் நடித்த ஒரு படத்தினுடைய ரீ-மேக் தான் “தலை நகரம்” படம் என்பது தெரிய வந்ததாம். தனக்கு தெரியாமலே இந்த விஷயத்தை செய்து முடித்த சுராஜின் சாமர்த்தியத்தை கண்டு வியந்ததாக சொல்லி இருக்கிறார்.