கொரோனா நிவாரணம்…. சன் டிவி கொடுத்தது எவ்வளவு தெரியுமா?

கொரோனா நிவாரணம்…. சன் டிவி கொடுத்தது எவ்வளவு தெரியுமா?

கொரோனா நிவாரணத்துக்காக சன் டிவி குழுமம் 10 கோடி ரூபாய் மற்றும் தனது ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைக் கொடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடம் மத்திய அரசும் மாநில அரசும் நிதியுதவி கேட்டுள்ளனர். இதையடுத்து தொழிலதிபர்களும் பிரபலங்களும் நிதி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி குழுமம் தனது சார்பில் ரூபாய் 10 கோடி நிதி உதவி செய்துள்ளது. இதனை சன் டிவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. மேலும் ரூ.10 கோடி மட்டுமின்றி சன் டிவி குழுமத்தில் பணிபுரியும் பணியாளர்கள் 6 ஆயிரம் பேர்களின் ஒரு நாள் ஊதியமும் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக சன் டிவி குழுமம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து சன் குழுமத்துக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.