cinema news
சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து… உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்… அதிர்ச்சி சம்பவம்…!
சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் இயக்குனர் மித்திரன் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது சர்தார். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தின் 2-வது பாகம் தொடர்பான பூஜை கடந்த வாரம் துவங்கியது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார்.
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாந்த் ஸ்டூடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகின்றது. அப்போது சண்டைக்காட்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.