பாலிவுட்டில் பிரபல வில்லன் நடிகராக இருந்துவரும் சோனு சூட் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தனது 6 மாடி ஹோட்டலை தங்கிக்கொள்ள அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் 6000 ஐ நெருங்கி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் வேளையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவ்வாறு உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தனது 6 மாடி ஹோட்டலை தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட். இதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே அறிவித்துள்ளார். இதைப் போல மற்றொரு சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக் கானும் தனது 4 மாடிக் கட்டிடத்தை கொரோனா தற்காலிக மருத்துவமனையாக அமைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.