வித்தியாசமான கதைக்களத்தில் வந்த சொல்லத் துடிக்குது மனசு

வித்தியாசமான கதைக்களத்தில் வந்த சொல்லத் துடிக்குது மனசு

 


வித்தியாசமான கதைகளத்தில் வெளிவந்த திரைப்படம் சொல்லத் துடிக்குது மனசு என்ற திரைப்படம். இப்படத்தில் தில்லைநாதன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்திருந்தார். என்பது 90களில் பிரபலமாக இருந்த எடிட்டர் பி லெனின், 80 90களில் பிரபலமாக நாம் பார்த்து ரசித்த படங்கள் நன்றாக இருந்ததற்கு இவரும் மற்றொரு எடிட்டர் விடி. விஜயன் தான் காரணம். இப்படியான லெனின் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் தான் சொல்லத் துடிக்குது மனசு. இயக்குனர் லெனின் அந்தக் கால இயக்குனர் பீம்சிங்கின் மகன் ஆவார்.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த பிரியா ஸ்ரீ யை சுற்றி மூலக்கதை அமைக்கப்பட்டிருந்தது. தேன்மொழி என்று அந்த கதாபாத்திரம் தான் படத்தின் மையக்கருத்தாக இருந்தது. தேன்மொழி என்ற அந்தப் பெண்ணினால் ஏற்படும் குழப்பங்கள் தான் படத்தின் கதை. 1988 இல் இப்படம் வெளியானது.

 

இப்படத்தில் கார்த்திக் தான் நாயகன் என்றாலும் கிளைமாக்ஸ் இல் வரும் ராதாரவிவையும் இன்னொரு நாயகன் என சொல்லலாம்.

 

இளையராஜா சிறப்பான பின்னணி இசையை யும் சிறப்பான பாடல்களையும் கொடுத்திருந்தார் உதாரணமாக எனது விழி வழி மேலே, குயிலுக்கு ஒரு நிறம் இருக்கு,

பூவே செம்பூவே, வாய கட்டி வயித்த கட்டி என அனைத்து பாடல்களும் நன்றாக இருந்தது. ஆனால் எல்லாம் இருந்தாலும் பல படங்களின் வெற்றிக்காக பாடுபட்ட எடிட்டர் லெனினின் இந்தப் படம் சில பல  சொதப்பல்களால் பெரிய அளவில் போகவில்லை.

எத்தனையோ படங்களை சிறப்பான முறையில் எடிட் செய்த லெனின் இந்த படத்தின் திரைக்கதையில் செய்த சில சொதப்பல்களால் படம் பெரிய அளவில் செல்லாமல் போய்விட்டது. மற்றபடி இந்த படத்தின் கதை வித்தியாசமானது தான் அதில் மாற்று கருத்து இல்லை.

 

அதுபோல இளையராஜா  போட்டு கொடுத்த பூவே செம்பூவே போன்ற பாடலை இதுவரை சிறப்பான முறையில் இவர் படமாக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் ராஜா ரசிகர்களிடையே இருந்து வருகிறது.