ஆர் ஆர் ஆர் படத்தின் சூப்பர் அப்டேட் – அதோடு கொஞ்சம் அறிவுரையும்!

ஆர் ஆர் ஆர் படத்தின் சூப்பர் அப்டேட் – அதோடு கொஞ்சம் அறிவுரையும்!

தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளது.

பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்தவர் ராஜமௌலி. அந்த படத்துக்கு பின் அவர் தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து ஆர்.ஆர். ஆர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் நடித்து வருகின்றனர்.

350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை இந்தப்படத்தின் டைட்டில் லோகோ மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் போன்றவைகளை வைக்கக் கூடாது என ராஜமௌலி வேண்டுகோள் வைத்துள்ளார். தனது டிவிட்டரில் அவர் ‘ப்ளக்ஸ் வைக்காதீர்கள்… நோட்டீஸ் ஒட்டாதீர்கள்… வீட்டில் இருங்கள்… பாதுகாப்பாக இருங்கள்… ஆன்லைனில் இருங்கள்… த்ரில்லை உணருங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.