Connect with us

24 வருஷம்… விக்ரமை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த காந்தாரா பட நாயகன்… வைரல் புகைப்படம்..!

cinema news

24 வருஷம்… விக்ரமை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த காந்தாரா பட நாயகன்… வைரல் புகைப்படம்..!

24 வருட காத்திரப்புக்கு பிறகு நடிகர் விக்ரமை சந்தித்ததை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கின்றார் காந்தாரா திரைப்படத்தின் நாயகன் ரிஷப் செட்டி.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்ரம். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. இப்ப படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் விக்ரம் பிஸியாக இருந்து வருகின்றார். தமிழ் சினிமாவில் குரல் கலைஞராக தனது திரைப்படத்தை தொடங்கிய இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் தனித்துவமான குரலாலும் மக்களை வெகுவாகக் கவர்ந்தார்,

பாலா இயக்கத்தில் இவர் நடித்த சேது திரைப்படம் விக்ரமுக்கு மிகப்பெரிய பிரேக்கிங் ஆக இருந்தது. தொடர்ந்து ஆக்சன் ஹீரோவாக கலக்கி வந்த இவர் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். தற்போது விக்ரமை சந்தித்திருக்கும் கன்னட திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர் இயக்குனர் ரிஷப் செட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் நடிகனாக உருவாவதற்கான எனது பயணத்தில் விக்ரம் சார் எப்போதும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். 24 ஆண்டுகள் கழித்து என் ஹீரோவை நேரில் சந்தித்தது என்னை அதிர்ஷ்டசாலியான மனிதராக உணர வைத்துள்ளது. என்னைப் போன்ற நடிகர்களுக்கு உந்து சக்தியாக இருப்பதற்கு மிகவும் நன்றி தங்கலான் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், லவ் யூ என்று தெரிவித்து இருக்கின்றார்.

More in cinema news

To Top