cinema news
சாதனை மேல் சாதனை செய்யும் ராயன்… சன் பிக்சர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தனது 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்தத் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தனுஷ் உடன் இணைந்து துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தின் திரைக்கதை லைப்ரரி ஆஃப் தி அகடமி ஆப் மோஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்-இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாளில் ராயன் திரைப்படம் தான் அதிக வசூலை பெற்றிருக்கின்றது.
தனுஷ் நடித்த படங்களிலேயே ராயன் படம்தான் வசூலில் அதிகமான படமாகும் 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் திரைப்படம் தான் முதலிடத்தில் இருக்கின்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சன் பிக்சர் நிறுவனம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த படக்குழுவினர் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள். படம் இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளது. மக்களின் ஆதரவு இன்னும் அதிகமாக இருக்கின்றது ராயன் திரைப்படத்திற்கு இதுவரை 116 கோடி வசூல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.