இயக்குனர் ராம்கோபால் வர்மா தனக்கு கொரோனா இருப்பதாக பொய்யான செய்தியைப் பரப்பி ரசிகர்களை கோபமாக்கியுள்ளார்.
இந்திய சினிமாவில் சர்ச்சைகளுக்குப் பெயர்போன இயக்குனர் ராம் கோபால் வர்மா. வழக்கமாக சினிமா பற்றி ஏதாவது சர்ச்சைகளைக் கிளப்பும் இவர் இந்த முறை மிகவும் சென்ஸிட்டிவான விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளார். நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்’ எனக் கூற ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் ஒரு டிவிட்டில் ‘என்னை மன்னித்துவிடுங்கள். அவர் இப்போது தான் அது ஏப்ரல் ஃபூல் என்று சொன்னார். அது அவருடைய தவறு, என் மீது எந்தத் தவறும் இல்லை’ எனக் கூற ரசிகர்கள் கடுப்பானார்க்ள். பலரும் அவரின் பொறுப்பற்ற தன்மையை விமர்சிக்க மீண்டும் ஒரு டிவீட்டைப் பகிர்ந்தார்.
அதில் ‘இந்த அவசரக் காலத்தில் சூழ்நிலையைக் கொஞ்சம் இலகுவாக்குவதற்காகவே நான் அவ்வாறு பதிவிட்டேன். அதனால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும்’ எனக் கூறியுள்ளார். ஆனாலும் கோபம் குறையாத ரசிகர்கள் அவரது டிவிட்டில் அவரைத் திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.