rajini kamal lokesh kanagaraj
comeback combo Rajini-Kamal

46 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – கமல்ஹாசன் திரையுலக மீண்டும் இணைவு!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி இது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் இணைகின்றனர். 1970–களில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, தப்பு தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், தில்லு முல்லு  உள்ளிட்ட பல படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அதன் பின்னர், தனித்தனி பாதையில் சென்று, இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்தனர்.

இப்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தலைமையில், இருவரும் இணையும் இந்த புதிய முயற்சி தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பெரும் தருணமாக கருதப்படுகிறது. சமீபத்தில் நடிகை சுஹாசினி, “ரஜினி – கமல் உண்மையிலேயே சகோதரர்கள் போல நெருக்கம் கொண்டவர்கள்” என்று பகிர்ந்துள்ளார். மேலும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் 2025 (SIIMA 2025) விருது விழாவில் கமல்ஹாசன், “இது சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த ரீயூனியன் அறிவிப்பு வெளியாகியவுடன், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். “ரஜினி – கமல் காம்போ” மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது தமிழ் சினிமா உலகிற்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என அனைவரும் கருதுகின்றனர்.

Kamal-Rajini-Lokesh
Reunion Kamal-Rajini

கமல் – ரஜினிகாந்த் இருவரின் ரியூனியன் குறித்த, அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.  ரசிகர்கள் அதுவரை காத்திருக்க தான் வேண்டும்.  பார்க்கலாம் இருவரும் “லோகேஷ் கனகராஜன்” இயக்கத்தில் இணைந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

“இட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்”