Connect with us

தொலைக்காட்சியில் சாதனை படைத்த ரஜினியின் நிகழ்ச்சி!

cinema news

தொலைக்காட்சியில் சாதனை படைத்த ரஜினியின் நிகழ்ச்சி!

ரஜினி கலந்துகொண்ட இன் டூ த வைல்ட் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் 40 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இன் டு த வைல்டு நிகழ்ச்சி பியர் கிரில்ஸ் பங்கேற்கும் சாகசம் நிறைந்த காட்டுப்பயணத்தை பற்றிய தொகுப்பு. இதனை பியர் கிரில்ஸ் பலலாண்டுகளாக தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் உண்டு. இந்தநிகழ்ச்சியில் பலநாட்டை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியும் இதில் களம் இறங்கினார்.

இது சமம்ந்தப்பட்ட எபிசோட் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி இப்போது சாதனைகளை படைத்துள்ளது. ரஜினி கலந்து கொண்ட குறிப்பிட்ட எபிசோட் இதுவரை 40 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி டிவியின் 12 கிளைச் சேனல்களில் இந்த ஆண்டில் இதுவரை ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் அதிகமான ரேட்டிங்கைப் பெற்றுள்ளதாம். அதே போல ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக் 3.32 பில்லியன் பதிவுகள் மூலம் 1.41 பில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது.

More in cinema news

To Top