Connect with us

ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் தற்காலிக மருத்துவமனை ஆகிறதா? இணையத்தில் பரவும் செய்தி!

cinema news

ரஜினியின் ராகவேந்திரா மண்டபம் தற்காலிக மருத்துவமனை ஆகிறதா? இணையத்தில் பரவும் செய்தி!

ரஜினி தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆகும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினால் மக்களிடம் நிதியுதவி கேட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் பட்சத்தில்  அவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாததால் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினி தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளதாக ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவலின் உண்மைத் தன்மை தெரியவில்லை. ஏற்கனவே கமல், விஜயகாந்த் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் இதுபோல தங்களுக்கு சொந்தமான இடங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in cinema news

To Top