துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கின் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அந்த படத்துக்காக அதிக சம்பளம் கேட்டது மற்றும் செலவுகளை அதிகமாக்கியதால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதனால் அவருக்கு தயாரிப்பாளர்கள் யாரும் படம் கொடுக்க வேண்டாம் எனவும் சொல்வது மாதிரி விஷால் தரப்பில் கடிதம் ஒன்று வெளியானது. இதையடுத்து மிஷ்கின் கொடுத்த வீடியோ பதில் இணையதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிரசன்னாவிடம் ரசிகர் ஒருவர் ‘மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் 2 படம் எப்படி இருக்கும்?’ என்று கேட்க, அதற்குப் பதிலளித்துள்ள பிரசன்னா ‘அவர் இந்த படத்தில் இல்லாதது துரதிர்ஷ்டமானது. ஆனால் விஷால் திறமையானவர். அதை அவர் இந்த படத்தின் மூலம் நிரூபிப்பார்.’ எனக் கூறியுள்ளார்.