cinema news
இப்பவும் அபிராமி பாவம்…மறுபடியும் குணாவுக்கு வந்துடுச்சு சோகம்…
சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்தது கமல்ஹாசன் நடித்த “குணா”. “மஞ்சுமெல் பாய்ஸ்” இது மலையாளப் படமா? அல்லது தமிழ்ப் படமா? என்ற கேள்வி படத்தை பார்க்காமல் இருப்பவர்களின் மனதில் எழக்கூடிய முக்கியமான ஒன்றாகவே இருக்கும்.
‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் தான் இந்த குழப்பத்திற்கு காரணமாகவே இருந்தது. அதோடு “குணா” படமாக்கப்பட்ட குகையும் வேர்ல்டு லெவல் ட்ரெண்டிங் ஆனது. இப்போது இன்ஸ்டாக்ராம், ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப் என எந்த சோசியல் மீடியாவை பார்த்தாலும் ‘அபிராமியே தாலாட்டும் சாமியே நான் தானே தெரியுமா’ விற்கு பலரும் ஆடிய ரீல்ஸ் தான் வைரல்.
இதனாலோ, என்னவோ தெரியவில்லை இப்போது உள்ள 2கே கிட்ஸுக்கு “குணா” படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை புறப்பட்டு விட்டது. ரீ-ரிலீஸுக்கு கோரிக்கைகள் வலுத்து வந்தது.
டிஜிட்டல் மயமாக மாற்றி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேலைகள் துவங்கியது. அப்போது தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகி விட்டது.
கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் “குணா” படத்தை பிரமிட் மற்றும் எவர் கிரீன் மீடியா வெளியிட தடையை கோரினார். அவருடைய கோரிக்கையில் இந்த இரு நிறுவனங்களும் படத்தை நிரந்தரமாக வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் “குணா” படத்தை வெளியிட இடைக்கால தடையை பிறப்பித்தது. அதோடு மட்டுமல்லாமல் பிரமிட் மற்றும் எவர் கிரீன் மீடியா வருகிற இருபத்தி இரண்டாம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
திரையில் தன்னை பார்க்க பலரும் காத்திருக்கிறார்கள் என நினைத்த இந்த தடையால் பாவமாகவே பார்க்கப்படுகிறார். ரெண்டாவது ரவுண்டிலாவது சூப்பர் ஹிட் அடிக்கலாம் என நினைத்த “குணா” சோகமாகி விட்டார்.