உங்கள் ஆபாசப்படங்கள் நிறைய இருக்கின்றன…. அதை ? – நமீதாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நபர் !

உங்கள் ஆபாசப்படங்கள் நிறைய இருக்கின்றன…. அதை ? – நமீதாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நபர் !

சமூகவலைதளங்களில் அவ்வபோது அதிக பிரசங்கிகளாக மாறி பிரபலங்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த குஜராத்தைச் சேர்ந்த நமீதா பிக்பாஸ் சீசன் 1 மூலம் தமிழக மக்கள் அனைவருக்கும் அறிமுகமானார். சமூகவலைதளங்களில் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை அதிகளவில் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் ‘ உங்களின் ஆபாச படங்கள் இணையதளங்களில் இருக்கின்றன. அவற்றை  நான் இங்கே பதிவிடவா ?.’ என மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபருக்கு சவால் விடும் விதமாக ‘முடிந்தால் அதனை பதிவு செய்துகொள்’ எனக்கூறி ‘இதுபோன்ற ஆட்கள் வாழவேத் தகுதியற்றவர்கள் எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.