cinema news
நாகச்சைதன்யாவின் 2-வது திருமணம்… 2027-ல் விவாகரத்து… சர்ச்சையை கிளப்பிய ஜோதிடர்…!
தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகச்சைதன்யா. பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த அசதி வரும் இவர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டுகளில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விவாகரத்துக்கு நாகசைதன்யாவும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல நடிகை சோபிதா துளிபாலாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை உண்மை என்று நிரூபிக்கும் வண்ணம் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கின்றது.
இந்நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நாகச்சைய்தன்யா சோபிதா துளிபாலா ஜாதகத்தை பரிசீலித்ததாகவும் அதில் பொருத்தம் சரியாக இல்லை என்றும் இருவரும் 2027 ஆம் ஆண்டு பிரிந்து விடுவார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த தகவல் வலைதளத்தில் வைரலாகி வந்த நிலையில் ஜோதிடர் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.
சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டிருக்கின்றது. கேட்காமலேயே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமான தகவலை வெளியிடுவது தவறு என்று கண்டித்து இருக்கின்றார். இதையடுத்து தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. வருகிற 22ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கின்றது.