விளக்கேற்றினால் கொரோனா குணமாகிடுமா எனக் கேட்ட நபருக்கு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அளித்த பதில் கேலிகளையும் கண்டனங்களையும் பெற்றுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி வெளியான திரவுபதி திரைப்படம் தமிழக சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் வெளியானப் படங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாக அமைந்தது. ஆனால் அந்த படம் ஏற்படுத்திய சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போனது.
இதையடுத்து இந்த படத்தின் இயக்குனர் மோகன் சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரிச்சயமான நபராக மாறினார். இந்நிலையில் கொரோனா காரணமாக இப்போது அவர் பேசிய கருத்து ஒன்று சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
கொரோனாவை முன்னிட்டு நேற்றிரவு மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் விளக்கேற்ற அதற்கு எதிர்வினைகளும் சமூகவலைதளத்தில் இருந்தன. இதையடுத்து சமூகவலைதளத்தில் ஒருவர் ‘விளக்கேத்துனா கொரோனா போயிடுமா?’ எனக் கேள்வி எழுப்ப, அதற்கு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ‘அப்ப டிரீட்மெண்ட் கொடுத்தா மட்டும் குணமாயிடுமா?’ என்ற கேள்வியை எழுப்ப, அது சம்மந்தமான ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் பரவி மோகனை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.