கஸ்தூரி ராஜா இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்த படம், தாய் மனசு, சரவணன், சுவர்ணா, பப்லு, மீரா உள்ளிட்டோர் நடித்த இப்படம் படம் பார்ப்பதற்கும் ஓரளவு ஏற்றபடம்தான்.
இப்படத்துக்கு தேவா இசையமைத்திருந்தார். சின்ன மருது , பெரிய மருது என இரு கிராமத்து அண்ணன் தம்பிகளாக சரவணன், பப்லு நடித்திருந்த இப்படத்தில் எப்படியோ தேவா இந்த தூதுவளை அரைச்சு பாடலை போட்டுவிட்டார், இன்னைக்கு வரை அந்த பாட்டை விடலங்க, நீங்கள் ஏறும் 100 சதவீத பிரைவேட் பஸ்களிலும் மினி பஸ்களிலும் 95 சதவீதம் இந்த பாடலை கண்டிப்பா ஒலிபரப்பு செஞ்சிடுவாங்க அந்த அளவுக்கு இந்த பாட்டு இருக்கு.
இந்த பாட்டோட சகோதரனா இன்னொரு பாட்டு இருக்கு அதுதான் எருக்கஞ்செடியோரம் இறுக்கி பிடிச்ச என் மாமா என்ற பாட்டு, இந்த பாட்டும் இன்னைக்கு வரை அனைத்து இடங்களிலும் சக்கை போடு போட்டுட்டு இருக்கு, அதே தேவா இசையமைப்பில புதுமுக நாயகன் சரத்ராஜ், சிவரஞ்சனி நடிப்புல இப்படம் வந்தது. இப்படத்திற்கும் தேவாதான் இசை. இரண்டு பாடல்களும் ஏதோ மினி பஸ்கள், பிரைவேட் பஸ்களின் டெம்ப்ளேட் சாங்ஸ் போல இன்று வரை தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகின்றன.

