மாஸ்டர் படத்திற்காக வெளியான மூன்று போஸ்டர்களுக்கு பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனஜராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்காக வெளியிடப்பட்ட மூன்று போஸ்டர்களைப் பற்றிய ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் பேச்சின் போது ‘படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹீரோவின் அறிமுகக் காட்சி ; இரண்டாவது போஸ்டர் படத்தின் இடைவேளைக் காட்சி; மூன்றாவது போஸ்டர் கிளைமாக்ஸ் காட்சி’ எனத் தெரிவித்துள்ளார்.