cinema news
மறக்க முடியாத லதா மங்கேஷ்கர்…கேட்டுக்கிட்டே இருக்கலாம் இவங்க பாடல்களை!…
தமிழை தாய் மொழியாக கொண்டிருக்காமலும், தமிழகத்தை பூர்வீகமாக கொள்ளாமலும் தமிழ் சினிமாவில் பாடல்களை பாடி முத்திரை பதித்தவர்கள் ஏராளம். அவர்கள் பாடிய பாடல்கள ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கேட்க வைக்கும் பாடல்களாக அமைந்தது. உதாரணமாக பலரை சொல்லலாம்.
ஆனால் இதில் முக்கியமான பாடகராக கருதப்படுபவர் லதா மங்கேஷ்கர். பாலிவுட்டின் பிரபலமான இவர். தமிழில் பாடியுள்ள பாடல்கள் இன்றும் நினைவில் ரீங்காரம் இட்டுக்கொண்டுதான் இருக்கும். “சத்யா”படத்தில் அவர் எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியிருந்த ‘வலை யோசை கலகலகலவென’ பாடல் இன்று கேட்டாலும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். இளையராஜாவின் இசையும் இருவரும் பாடிய விதமும் குற்றால அருவியில் குளித்தால் வரும் குளுமையை கொடுத்துவிடும்.
பாடலின் இடை இடையே எஸ்.பி.பி.யின் சிரித்த விதமும் பாடலை வேறு லெவெலுக்கு கொண்டுசென்றது. லதா மங்கேஷ்கர் பாடிய விதத்தை பற்றி கூட இளையராஜா ஒரு முறை வியந்து பேசியிருந்தார். லதா கமங்கேஷ்கர் தமிழில் பாடுய முதல் பாடல் எது தெரியுமா?.
பிரபு, ராதா நடிப்பில் வெளிவந்த “ஆனந்த்” படத்தில் வரும் ‘ஆராரோ, ஆராரோ’. இன்று கேட்டாலும் இனிமையாக ஒலிக்கும் அந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை போலவே “என் ஜீவன் பாடுது” படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும்’ பாடலை பாடியிருந்தார்.
மிகக்குறைந்த ஏண்ணிக்கையிலான பாடல்களை மட்டுமே இவர் தமிழ் மொழியில் பாடியிருந்தாலும் . பாடியவை அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள் தான். மொழி தெரியாத தமிழர்கள் கூட பாடல்களை கேட்ட பிறகு இவரின் இதர மொழி பாடல்களையும் ரசிக்கத்துவங்கி விட்டரனர்.