நடிகை குஷ்பூவைப் பற்றியும் திரையுலகினர் பற்றியும் கேவலமாக கமெண்ட் செய்த அஜித் ரசிகருக்கு குஷ்பு கோபமாக விமர்சனம் செய்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க சொல்லப்பட்டது. இதன் ஒரு கட்டமாக சினிமா படப்பிடிப்புகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலிகளாக இருந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்காக திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியினை அளித்து வருகின்றனர். இதையடுத்து நடிகர் குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் ஆகியோர் 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளுத்துள்ளனர். இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர அதில் கமெண்ட் செய்த விஜய் தமிழன் என்ற அஜித் ரசிகர் ஒருவர் ‘அப்போ தமிழ்நாட்டு மக்களுக்கு எதும் செய்ய மாட்டிங்க, கூத்தாடி கூத்தாடிக்குதான கொடுத்து உதவுவார்கள்’ என அநாகரீகமாக பேசினார். இதற்குப் பதிலளித்த குஷ்பு ‘உன்னைப்போன்ற ஒரு நபரை ரசிகர் என சொல்லிக் கொள்வதற்கு அஜித் நிச்சயம் வெட்கப்படுவார்’ என ஆவேசமாகப் பதிலளித்துள்ளார்.