80, 90களின் வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு பொற்காலமான வாழ்க்கை. அந்தக்காலங்களில் வாழ்ந்த அனைவர்க்கும் இது நன்கு தெரியும்.

அந்தக்காலங்களில் வந்த படங்கள் அதில் வந்த நட்சத்திரங்கள் பலரை நாம் ரசித்து பார்த்திருக்கிறோம், அப்படி நாம் ரசித்து பார்த்த நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக மரணித்து வருவது மிகுந்த மன வேதனையளிக்கிறது.
80, 90களில் இயக்குனர் விசு இயக்கிய ஒவ்வொரு படமும் தனித்துவமானவை, ஆழமான குடும்ப உறவுகளை காண்பித்த படங்கள் என சொல்லலாம், இப்படி விசுவின் ஒரு சிறப்பான படம்தான் மணல் கயிறு.
இந்த படத்தில் நடித்தவர் திரு ரங்கா. விசுவின் ஊருக்கு உபதேசம், மணல் கயிறு, மற்றும் விசு தவிர்த்தும் பல்வேறு படங்களில் நடித்தவர் ரங்கநாதன். குரியகோஸ் ரங்கா என இவர் அழைக்கப்பட்டார்.
மணல் கயிறு படத்தில் சாந்தி கிருஷ்ணாவின் அண்ணனாக அதுவும் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். மேலும் கீழ்வானம் சிவக்கும் , நாலு பேருக்கு நன்றி, முத்துக்கள் மூன்று என பல படங்களில் நடித்து கலக்கி இருந்தார் இவர்.
சோசியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருந்த இவர் இன்று மரணமடைந்தார்.

