cinema news
கர்நாடகாவில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்ற பாஜக
கர்நாடகாவில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கர்நாடக முதல்வராக இருப்பவர் பாரதிய ஜனதாவின் எடியூரப்பா.
கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்
‘‘கரோனா தடுப்புக்காக எடியூரப்பா பெருமளவில் பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டோருக்கும் இதில் பங்கு இருக்கிறது.
மேலும் பெங்களூரு வளர்ச்சி கழக ஒப்பந்ததாரருடன் விஜயேந்திரா பேரம் பேசியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதை சுட்டி காட்டினார்
இதற்கு பாஜக தரப்பில் கடும் வாக்குவாதம் தெரிவிக்கப்பட்டது
அப்போது முதல்வர் எடியூரப்பா, ‘என் மகன் விஜயேந்திரா லஞ்சம் வாங்கியதாகவோ, என் குடும்பத்தினர் ஊழலில் ஈடுபட்டதாகவோ நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இல்லையென்றால் சித்தராமையா அரசியலில் இருந்து விலக தயாரா? என் மகன் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு கூட தயாராக இருக்கிறேன்” என ஆவேசமாக கூறினார்.
நீண்ட விவாதத்துக்கு பின் இரவு 10.55 மணியளவில் பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர காகேரி, காங்கிரஸார் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது கரோனா தொற்றின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை.
அவையில் இருந்தவர்களில் பெரும்பான்மையோர் காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்ததால், அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர காகேரி அறிவித்தார்.