இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து பற்றி நடிகர் கமலிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அவரது கட்சியினர் கோபமாக போஸ்டர் ஒட்டுயுள்ளனர்.
கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ படத்தில் படப்பிடிப்பின்போது கடந்த மாதம் 19 ஆம் தேதி விபத்து ஒன்று ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது சம்மந்தமாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணை அதிகாரி படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர் என்ற முறையில் நடிகர் கமல்ஹாசனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுமார் 3 மணி நேரம் கமலஹாசனிடம் விசாரணை நடத்தினர். இது கமல் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினர் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. இதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து இன்றும் மீண்டும் மதுரை கிளை சார்பில் ‘இந்தியனுக்கே விசாரணையா? வீணர்களே, வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து. இது தாண்டா தமிழனின் கெத்து. குனிந்து கும்பிடு போடும் முட்டாள் அரசியல்வாதிகளே முடிந்தால் களத்தில் வந்து மோது. இல்லை தமிழ்நாட்டை விட்டு ஓடு. நம்மவரை சீண்டினால் எவனையும் எதிர்ப்போம். எமனையும் எதிர்ப்போம்’ என ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.