cinema news
பிரபல நடிகரின் தம்பி மீது நடிகை புகார் – திரையுலகில் பரபரப்பு !
நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர் புகார் கூறியுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் மற்றும் தயார்ப்பாளர் என பன்முக திறனுடையவர். மேலும் சமூக சேவைகள் செய்து மக்கள் மனதில் நல்ல பெயரை சம்பாதித்து உள்ளார். இந்நிலையில் அவருக்குக் களங்கம் ஏற்படும் விதமாக அவரது தம்பி எல்வின் மீது துணை நடிகை ஒருவர் புகார் சொல்லியுள்ளார்.
எல்வின் சில திரைப்படங்களில் நடித்துளளார். அப்போது தனக்கும் அவருக்கு ஏற்பட்டதாகவும், ஆனால் அதன் பின்னர் தன்னை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் சொல்லியுள்ளார். மேலும் இது சம்மந்தமாக அவர் போலிஸ் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர் தற்போது தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
அதனால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.