பிகில் படம் மற்றும் மாஸ்டர் படத்துக்கு வாங்கிய சம்பளத்துக்கு விஜய் முறையாக வட்டிக் கட்டிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரெய்டில் பணம் எதுவும் கைப்பற்ற படவில்லை என்று கூறப்பட்டது.
அதன் பின்னர் பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் மீண்டும் ஒருமுறை சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அதிரடியாக விஜய் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதாக சொல்லியுள்ளனர்.
மேலும் அதில் பிகில் படத்துக்கு 50 கோடி சம்பளம் பெற்றதாகவும் மாஸ்டர் படத்துக்காக 80 கோடி சம்பளம் பெற்றதாகவும் சொல்லியுள்ளனர். இந்த தகவலால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.