cinema news
12 சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கும் ’பேமிலி’ – இணையத்தில் வைரல் ஆகும் குறும்படம்!
இந்திய மொழிகளின் சூப்பர் ஸ்டார் நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் பேமிலி எனும் திரைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா துறை முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதால் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்ட இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இணைந்து பேமிலி எனும் கிராமத்தைத் தயாரித்துள்ளனர். இந்த குறும்படத்தில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சோனாலி குல்கர்னி, புரொசஞ்சித் சட்டர்ஜி, ஷிவ ராஜ்குமார் மற்றும் தில்ஜித் தோசஞ்ச் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரே வீட்டின் உறுப்பினர்களான இவர்கள் அனைவரும் வீட்டின் மூத்தவரான அமிதாப் பச்சனின் காணாமல் போன சன் கிளாஸைத் தேடிக் கண்டுபிடிப்பதே கதை. ஆனால் இதை அவர்கள் தனித்தனியாக தங்கள் வீடுகளில் இருந்த படியே எடுத்து அதன் பின்னர் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைப் பற்றி இறுதியில் பேசும் அமிதாப் பச்சன, சினிமா தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் வகையில் இத்திரைப்படத்தை நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த குறும்படத்தை விளம்பரப் பட இயக்குனரான பிரசூன் பாண்டே இயக்க, கல்யாண் ஜுவல்லர்ஸ், சோனி டெலிவிஷன் நிறுவனம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் உதவியிருக்கின்றனர். இந்த குறும்படம் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.