cinema news
விவாகரத்து பெற்ற தம்பதிகளை சேர்த்து வைத்த கொரோனா – இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சி!
பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சுஷான்னே ரோஷன் ஜோடி கொரோனா பீதி காரணமாக மீண்டும் ஒரே இடத்தில் வசிக்க ஆரம்பித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க சொல்லப்பட்டது. இந்தியாவில் 21 நாட்கள் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தங்கள் வீடுகளே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் கொரோனாவால் பிரிந்திருந்த ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் சுஷான்னே ரோஷன் தம்பதியினர் மீண்டும் ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்துள்ளனர். ஹ்ருத்திக் ரோஷன் நடிகை கங்கனா ரனாவத்தைக் காதலிப்பதாக செய்திகள் பரவியதை அடுத்து ஹ்ருத்திக்கின் மனைவி தன் இரு மகன்களோடு தனியாக சென்று வசிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக மகன்களோடு வசிப்பதற்காக தன் கணவரின் வீட்டுக்கு வந்துள்ளார் சுஷான்னே ரோஷன். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார் ஹ்ருத்திக் ரோஷன்.