தீபாவளிக்கு ஆக்சன் படங்கள் வெளிவந்தது ஒரு காலம். மிக பிரமாண்ட ஆக்சன் திரைப்படங்களை தீபாவளி மோடில் சென்று ரசித்தால்தான் மனதுக்கு நிறைவா இருக்கும். அதுவும் படம் தீபாவளி பட்டாசு போல பயராய் இருந்துவிட்டால் தியேட்டர்ல போய் வைப் செய்துட்டு வந்துவிடலாம்.
ஆனால் இப்போது தீபாவளிக்கு எல்லாம் முக்கிய நடிகர்களின் படங்கள் எதுவும் இல்லாமல் காய்ந்து போன கம்மாக்கரை மாதிரி கிடக்கிறது தியேட்டர்.
இந்த தீபாவளிக்கு துருவ் விக்ரமின் பைசன், ஹரிஸ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் படங்கள் வெளிவருகிறது. வேறு எந்த முக்கிய படங்களும் ரிலீஸ் ஆகாத நிலையில் ஹரிஸ் கல்யாணின் டீசல் மட்டுமே ஒரு ஆக்சன் ஹீரோ சப்ஜெக்ட் ஆக உள்ளது. ஹரிஸ் கல்யாண் தேர்ந்தெடுக்கும் கதை களங்களும் நன்றாக உள்ளது. சென்ற வருடம் வெளிவந்த பார்க்கிங் படத்தை இதற்கு உதாரணமாய் சொல்லலாம்.
இந்த டீசல் படமும் வட சென்னை பகுதிகளில் நடக்கும் டீசல் முறைகேட்டையும், கார்ப்பரேட் கம்பெனிகள் இதில் எப்படியெல்லாம் உள்ளே நுழைந்து சேட்டை செய்கிறார்கள் இதில் தேசிய , சர்வதேச அரசியல் குறித்தும் விரிவாக சொல்லி இருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு ஆக்சன் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர், சண்முகம் முத்துசாமி. இந்த படத்தில் அதுல்யா ரவி ஹரிஸ் கல்யாண் ஜோடியாக நடித்துள்ளார்.படமும் இன்று வெளியாகி ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

