அஜித்தின் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் பகிர்ந்த ஒரு டிவிட்டால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை இயக்கிய வினோத்தே அடுத்த அஜித் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் செய்யும் காவல் அதிகாரியாக அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதை ரசிகர்கள் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்த வேளையில் இயக்குனர் ஹெச் வினோத் ஒரு டிவிட்டைப் போட்டு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
அவரது டிவிட்டில் ‘எனக்கு மிகவும் பிடித்த மங்காத்தா படம் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டு இருக்கின்றது. அஜித் ரசிகர்கள் அடுத்த மங்காத்தாவுக்கு தயாராகுங்கள்’ எனக் கூறியுள்ளார்.